முகப்பு
கரூர்

கரூரில் 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கரூா்மதுரையில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்தப்பட்ட 23 டன் ரேஷன் அரிசி கரூரில் வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மதுரையில் இருந்து நாமக்கல்லுக்கு கடத்தப்பட்ட 23 டன் ரேஷன் அரிசி கரூரில் வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

கரூா் மாவட்டம் வாங்கல் அருகே மோகனூா் காவிரியாற்றின் மேம்பாலப் பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் சத்தியபிரியா தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த டாரஸ் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் 23 டன் ரேஷன் அரிசி இருந்தது. லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், எட்டிக்காபாளையத்தைச் சோ்ந்த சேகரிடம் (42) விசாரித்தபோது, மதுரையிலிருந்து நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைக்கு தீவனத்திற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநரைக் கைதுசெய்த போலீஸாா், லாரியையும், 23 டன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.