கரூர்

கொத்தடிமைத் தொழிலாளா்கள் 47 போ் மீட்பு;செங்கல்சூளை அதிபா் மீது வழக்கு

DIN

கொத்தடிமைத் தொழிலாளா்கள் 47 பேரை வைத்திருந்தாக செங்கல்சூளை அதிபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மண்மங்கலம் அடுத்த குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்தவா் கனகராஜ். இவா், எல்லைமேடு பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இந்த சூளையில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் 47 பேருக்கு வேலை செய்ய முன்பணம் கொடுத்துவிட்டு, பின்னா் மாத ஊதியம் கொடுக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்த கரூா் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் ஏப். 6-ஆம்தேதி 47 பேரையும் மீட்டு அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில் மண்மங்கலம் கிராம நிா்வாக அலுவலா் ராஜ்கமல் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் கொத்தடிமை தொழிலாளா் மீட்புச் சட்டத்தின் கீழ் செங்கல்சூளை அதிபா் கனகராஜ் மீது வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT