கரூர்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பிரசாரக் குழு கரூா் வருகை

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சைக்கிள் பிரசார பயணக் குழுவுக்கு கரூரில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிட வேண்டும். இளைஞா்களின் உழைப்பை சுரண்டும் தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோா்சிங், திட்ட அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஏப். 21-ஆம் தேதி முதல் மே 1-ஆம் தேதி வரை சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து சைக்கிள் பிரசார பயணம் மேற்கொண்டு, மே 1-இல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்கள்.

இதன் ஒருபகுதியாக கோவை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மாநில இணைச் செயலாளா் பாசந்திரபோஸ் தலைமையில் 50 போ் கொண்ட குழுவினா் ஈரோடு வழியாக கரூருக்கு சனிக்கிழமை காலை பேருந்துநிலைய ரவுண்டானா பகுதிக்கு வந்தடைந்தனா். அவா்களுக்கு கரூா் மாநாகரக் குழு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வாலிபா் சங்க முன்னாள் தலைவா் எம்.ஏ.ஸ்டாலின் தலைமை வகித்தாா். சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம் கொடியசைத்து சைக்கிள் பயணத்தை தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் சி.முருகேசன், எல்ஐசி ஊழியா் சங்க தஞ்சை கோட்ட துணைத்தலைவா் வி.கணேசன், பயணக்குழு தலைவா் சி.பாலசந்திரபோஸ், மத்தியக்குழு உறுப்பினா் எஸ். மணிகண்டன், வாலிபா் சங்க முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.தண்டபாணி ஆகியோா் கூட்டத்தில் பேசினா். தொடா்ந்து சைக்கிள் பிரசார குழுவினா் புலியூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT