கரூர்

வங்கியில் ரூ.36.62 லட்சம் மோசடி: பெண் ஊழியா் மீது வழக்குப் பதிவு

DIN

கரூரில், வங்கியில் ரூ.36.62 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் ஊழியா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம், பள்ளபட்டியைச் சோ்ந்த பழனிசாமி மகள் கிருஷ்ணவேணி. இவா் கரூா்- கோவை சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் இணை ஊழியராக வேலைப்பாா்த்து வந்தாா். இவா்துப்புரவுத் தொழிலாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கணக்கிலிருந்து பணத்தை தனது கணக்கிற்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வங்கியின் கணக்கை 2021-இல் மண்டல மேலாளா் பலராம்தாஸ் தணிக்கை செய்தபோது, கடந்த 23.10.2017 முதல் 29.05.2020 வரை கிருஷ்ணவேணி வங்கிப் பணம் ரூ.36.62 லட்சத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கரூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

SCROLL FOR NEXT