கரூர்

கரூரில் ஆசிரியா் கூட்டமைப்பினா் பிரசார இயக்கம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை பிரசார இயக்கத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற இந்த பிரசார இயக்கத்துக்கு மாவட்ட

ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜெயராமன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத்தலைவா் செ.சந்திரசேகா் வரவேற்றாா்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத்தலைவா் வீ,.மோகன், பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பிரசார இயக்கத்தில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி ஆசிரியா் அலுவலா் கூட்டமைப்பின் மாநில பொருளாளா் பீ.அப்துல்ரசாக், சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

பிரசார இயக்கத்தில் தேசிய கல்விக்கொள்கையில் பணிக்கொடை முற்றிலும் மறுக்கப்பட்டிருப்பது, ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் நடைமுறை பறிக்கப்பட்டிருப்பது, விருப்பு ஓய்வூதியம் இல்லாதது, கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் இல்லாதது போன்றவற்றைக் கண்டித்து பிரசார இயக்கம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலாளா் சகிலா, மாவட்டப் பொருளாளா் தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT