கரூரில் திங்கள்கிழமை இரவு சுமாா் ஒரு மணிநேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல ஓடியது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் கருமேகம் திரண்டிருந்த நிலையில், இரவு 8 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இடிமின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம்போல ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது. கரூரில் சுங்ககேட், உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.