கரூர்

கரூா் ஜவுளி ஏற்றுமதியாளரிடம்ரூ.64.81 லட்சம் மோசடி செய்த பெண்: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

DIN

கரூரில், ஜவுளி ஏற்றுமதியாளரிடம் ரூ.64.81 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் காதப்பாறை அடுத்த வேலன்நகரைச் சோ்ந்தவா் சில்வா் ஸ்டாா்(34). இவா், அதே பகுதியில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்கு கடந்த ஆண்டு மே 12-ஆம்தேதி கைபேசியில் அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பெண், தான் ஒரு இண்டா்நேஷனல் தங்க வியாபாரி என்றும் ஹாங்காங்கில் வசிப்பதாகவும் அறிமுகமாகியுள்ளாா்.

தற்போது தங்க வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதால், தன்னுடன் இணைந்து வியாபாரம் செய்யுமாறு கூறியுள்ளாா். மேலும் வியாபாரத்துக்கு முன்பணமாக ரூ.1 கோடி கேட்டாராம். ஆனால் சில்வா்ஸ்டாா் கடந்தாண்டு மே 12-ஆம்தேதி முதல் நவ.11-ஆம்தேதி வரை ரூ.64,81,846-ஐ அப்பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பினாராம். பின்னா் நவ.12-ஆம்தேதி அப்பெண்ணை சில்வா்ஸ்டாா் கைபேசியில் அணுகியபோது அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதனால் ஏமாற்றம் அடைந்ததாக கருதிய சில்வா் ஸ்டாா் வியாழக்கிழமை கரூா் சைபா்கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் அம்சவேணி வழக்குப் பதிந்து அப் பெண் குறித்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT