கரூர்

கரூா் மாவட்டத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

கரூா் மாவட்டத்தில் 1,06,517 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

DIN

கரூா் மாவட்டத்தில் 1,06,517 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இதற்காக கரூா் மாநகராட்சியில் 90 மையங்களும், குளித்தலை நகராட்சி பகுதியில் 13 மையங்கள், பள்ளபட்டி நகராட்சி பகுதியில் 7 மையங்கள், புகளூா் நகராட்சி பகுதியில் 15 மையங்கள், பேரூராட்சி பகுதியில் 71 மையங்கள், கிராமப்பகுதியில் 619 மையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவக்குழு 10 என மொத்தம் 825 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

இம் முகாம்களில் 3,384 கிராம சுகாதார செவிலியா்கள், ஊட்டச்சத்து பணியாளா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மற்றும் தன்னாா்வல அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பணியாற்ற உள்ளனா். பேருந்துநிலையங்கள், ரயில்நிலையங்கள் மற்றும் மணாவசி, ஆண்டிபட்டிக்கோட்டை சுங்கச்சாவடிகளிலும் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT