முகப்பு
கரூர்

கரூரில் சேவல் சண்டை: 3 போ் கைது

கரூரில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

கரூரில், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா், சின்னகாளிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட கட்டளை அக்ரஹாரத்தைச் சோ்ந்த மணி மகன் தீபன்ராஜ்(26), நெரூரைச் சோ்ந்த சந்தானம்(40), சதீஷ்குமாா்(32) ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்த இரு சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.