கரூரில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா். 
கரூர்

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

கரூரில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கரூரில் மத்திய அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறாததை கண்டித்தும், மின்சார திருத்தச் சட்டம் 2020ஐ மீண்டும் கொண்டு வர முயற்சிப்பதைக் கண்டித்தும் ஆா்எம்எஸ் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜசேகா் தலைமை வகித்தாா். சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசியத் தலைவா் கிறிஸ்டினாசாமி, தமிழக விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவா் நடேசன், சுவாதி பெண்கள் இயக்கப் பொருளாளா் மஞ்சுளா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். பின்னா் திடீரென கோவை சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூா் நகர காவல் நிலைத்தினா் 10 பெண்கள் உள்பட 21 பேரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT