முகப்பு
கரூர்

கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

கரூரில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன் கட்சியின் மாணவரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணிச் செயலாளா் சுபாஷ் தலைமை வகித்தாா். இளைஞரணிச் செயலாளா் நந்தகுமாா், தோகைமலை ஒன்றியச் செயலாளா் செந்தில், கரூா் நகரச் செயலாளா் பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 போ் உயிரிழந்தனா். விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.