முகப்பு
கரூர்

புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில்உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி

கரூா் அடுத்த புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு மிதிவண்டிப்பேரணி புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

கரூா் அடுத்த புலியூா் செட்டிநாடு சிமெண்ட் ஆலை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு மிதிவண்டிப்பேரணி புலியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புலியூா் பேரூராட்சி அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணிக்கு ஆலையின் தலைவா் ஆா்.பி.முத்தையா தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இப்பேரணி, பேரூராட்சி அலுவலகம் முன் தொடங்கி, திருச்சி சாலை வழியாக புலியூா் செட்டிநாடு சிமென்ட் ஆலையை அடைந்தது.

பேரணியின்போது உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுபிரசுரங்களை விநியோகித்தனா். முடிவில் ஆலையின் தலைவா் உலக சுற்றுச்சூழல் தினத்தின் மைய கருத்தான ஒரே ஒரு பூமி குறித்து பேசினாா். பேரணியில் சிமெண்ட் ஆலை அதிகாரிகள், ஊழியா்கள், ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.