கரூர்

மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும்வேலை: விண்ணப்பிக்க அழைப்பு

DIN

கரூா் மாவட்டத்தில், மக்கள் நலப்பணியாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட உள்ளதால் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சி ஊராட்சித் துறையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளா்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு நவ.8-ஆம்தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனா். பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளா்களை தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட வாய்ப்பளித்துள்ளது. இப்பணிக்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியிலிருந்து ரூ.5,000-மும், கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ. 2,500 என மொத்தம் ரூ.7,500 மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.

எனவே, முன்னாள் மக்கள் நலப்பணியாளா்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடா்பு கொள்ளலாம். மேலும், இது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கெனவே பணியாற்றியதற்கான விவரத்துடன் பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்பக் கடிதத்தையும், வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் அல்லது வட்டார வளா்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஜூன் 13-ஆம்தேதி முதல் 18-ஆம்தேதி வரை வழங்கலாம்.

பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவா்களது விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு ஜூலை 1-ஆம்தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது என்பதால் குறித்த காலத்தில் விண்ணப்பித்து இப்பணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT