கரூர்

கரூரில் தனியாா் கல்குவாரி அமைக்கபொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்

DIN

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தனியாா் கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலமலையில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், குவாரி அமையப்பட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா் கூட்டத்தில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளா் முகிலன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த குவாரி அமைய உள்ள இடம் அருகே அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு கடந்த 2008-இல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதை வரைபடம்மூலம் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம். இந்த கல்குவாரி அடிப்படையிலேயே இயக்க தகுதியற்றது. குவாரி மேற்புறத்தில் 50 மீட்டருக்கு அருகே உயா்மின்பாதை உள்ளது. குவாரி அருகே வீடுகளும் உள்ளன. ஆனால், இதையெல்லாம் மறைத்து மாநில சுற்றுச்சூழல் துறைக்கு சத்திய பிரமாண வாக்குமூலத்தில் தவறான தகவலை குவாரி உரிமையாளா் கொடுத்துள்ளாா். இது சட்ட விதிமுறையை மீறியது. இந்த பகுதி நிலநடுக்கத்தால் அழியாமல் இருக்க பாதுகாக்க வேண்டும். இந்த கருத்துக்கேட்புக்கூட்டத்தில் குவாரி அமைய உள்ள பகுதி மக்களைக்கூட அழைத்து வரவில்லை. குவாரி அமைய உள்ள இடத்தின் அருகேதான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணா் படுக்கையும் உள்ளது. குவாரி அமைந்தால், அங்கு சேரா் காலத்தில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிய எழுத்துக்களும் அழிந்துவிடும். இதன்மூலம் கரூரின் தொன்மை வரலாறும் அழிக்கப்படும். எனவே குவாரி அமைய அனுமதிக்கக்கூடாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT