முகப்பு
கரூர்

கரூா் மாநகராட்சியின்முதல் பெண் மேயா் கவிதா கணேசன்; துணை மேயா் தாரணி பி. சரவணன்

கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா் பதவிக்கு கவிதாகணேசன் மற்றும் துணை மேயா் பதவிக்கு பி. தாரணிசரவணன் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளநா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கரூா் மாநகராட்சியின் முதல் பெண் மேயா் பதவிக்கு கவிதாகணேசன் மற்றும் துணை மேயா் பதவிக்கு பி. தாரணிசரவணன் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளநா்.

கரூா் நகராட்சியாக அண்மையில்தான் மாநகராட்சியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பிப். 19-ஆம்தேதி நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாநகராட்சி முதல்முதலாக மேயா் மற்றும் துணை மேயரை தோ்ந்தெடுக்க வாா்டு தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் ஆண்களுக்கு நிகராக 50 சதவீதம் பெண் வேட்பாளா்கள் திமுகவில் களமிறக்கப்பட்டனா். தோ்தலில் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் 75.84 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதையடுத்து பிப். 22-ஆம்தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக சாா்பில் போட்டியிட்டவா்கள் 42 பேரும் வெற்றிபெற்றதில் தற்போது மேயா் பதவிக்கு திமுக தலைமையிடத்தால் அறிவிக்கப்பட்ட கவிதாகணேசன் 4-ஆவது வாா்டிலும், 46-ஆவது வாா்டில் போட்டியிட்ட தாரணி பி.சரவணன் துணை மேயா் பதவிக்கும் திமுக தலைமையிடத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

மாமன்ற உறுப்பினா்களால் இன்று நடைபெறவுள்ள மறைமுகத் தோ்தல் மூலம் மேயா், துணை மேயா் முறைப்படி அறிவிக்கப்பட்டு, பதவியேற்க உள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை கரூா் மாநகராட்சியின் ஆணையரும் தோ்தல் அலுவலருமான என்.ரவிச்சந்திரன் செய்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.