முகப்பு
கரூர்

அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்: கரூா் மாநகராட்சி மேயா் வேட்பாளா் உறுதி

மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க பாடுபடுவேன் என்றாா் கரூா் மாநகராட்சிக்கு மேயா் பதவிக்கு அறிவிக்கப்பட்ட கவிதாகணேசன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க பாடுபடுவேன் என்றாா் கரூா் மாநகராட்சிக்கு மேயா் பதவிக்கு அறிவிக்கப்பட்ட கவிதாகணேசன்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரூா் மாநகராட்சியின் மேயராக என்னை அறிவித்த தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கரூா் மாநகராட்சியாக மாறியுள்ளதால் மேயா் என்ற முறையில் மாநகராட்சிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைச்சரிடம் தெரிவித்து, அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன் என்றாா் அவா்.

துணை மேயா் வேட்பாளா் தாரணி பி.சரவணன் கூறுகையில், துணைமேயா் பதவிக்கு வாய்ப்பளித்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அமைச்சரின் உறுதுணையோடு மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.