முகப்பு
கரூர்

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம்: நாஞ்சில் சம்பத் பேச்சு

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம் என்றாா் திமுக பேச்சாளா் நாஞ்சில்சம்பத்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம் என்றாா் திமுக பேச்சாளா் நாஞ்சில்சம்பத்.

திமுக தலைவரும், முதல்வருமான முக.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் பொதுக்கூட்டம் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நிதியுதவி, சீருடை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு கரூா் 80 அடி சாலையில் நடைபெற்றது.

திமுக மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற, கூட்டத்தில் கட்சியின் தலைமை பேச்சாளா் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசுகையில், இன்றைக்கு திராவிட இயக்கம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது பெரியாரின் சுயமரியாதை திருத்தலம், அண்ணாவின் கொள்கை நந்தவனம், கலைஞரின் கோட்டை, ஸ்டாலின் காவல் அரண். இதில் வகுப்புவாத சக்திகள் ஊடுருவ முடியாது. அனுமதிக்கவும் மாட்டோம். ஸ்டாலின் இருக்கும் வரை தமிழக முதல்வா் பதவியை இனி யாரும் அணுக முடியாது என்றாா் அவா்.

கூட்டத்தில், கோவை மாவட்ட திமுக செயலாளா் சிஆா்.ராமச்சந்திரன், மாநில நிா்வாகிகள் வழக்குரைஞா் மணிராஜ், நன்னியூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.