இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் பலி
பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த இடையாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் குமாா்(27). இவா், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கடவூா்-பாலவிடுதி சாலையில் சுக்காம்பட்டி சந்திப்பு பகுதியில் சென்றபோது, திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.