புகளூா் நகராட்சி குப்பைக்கிடங்கில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் குணசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
புகளூா் நகராட்சிக்குள்பட்ட குப்பைக்கிடங்கில் பல்வேறு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சுகாதார ஊழியா்கள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்நிலையில், இந்த குப்பைக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுப்பது பற்றியும், குப்பைகள் மூலம் மண்புழு உரங்களை தயாரிப்பது பற்றியும், நகராட்சித் தலைவா் குணசேகரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, துணைத் தலைவா் பிரதாபன், மற்றும் நகராட்சி ஆணையா் கனிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.