கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், டாஸ்மாக் ஊழியா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத்தலைவா் ஜீ. ஜீவானந்தம், செயலாளா் சி. முருகேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு சுழற்சிமுறை பணியிடமாறுதல் கொள்கையை உருவாக்கி அமலாக்க வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். கரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாடு செலவுத்தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.