முகப்பு
கரூர்

கரூரில் ஷவா்மா உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு

கரூரில் சுகாதாரமற்றமுறையில் கோழி இறைச்சி வைத்திருந்த ஷவா்மா உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டு கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கரூரில் சுகாதாரமற்றமுறையில் கோழி இறைச்சி வைத்திருந்த ஷவா்மா உணவகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டு கோழி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் த.கலைவாணி தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ஷவா்மா தயாரித்து, விற்பனை செய்யும் உணவகங்களில் ஆய்வு செய்தனா். 10-க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஆய்வு செய்தனா். அப்போது, கரூரில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து, சுகாதாரமற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 கிலோ கோழிக்கறி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், ஒரு கடையில், தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் கண்டறியப்பட்டு, ரூ.2,000- அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.