கரூர்

காவல்துறை ரோந்துப் பணிக்கு புதிய வாகனங்கள்

DIN

 கரூரில் 24 மணி நேர ரோந்துப் பணிக்காக, நான்கு புதிய வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புதிய நான்கு சக்கர வாகனங்களை காவல் ஆய்வாளா்களிடம் வழங்கி திருச்சி சரகக் காவல்துறைத் தலைவா் சரவணசுந்தா் கூறியது:

கரூா் நகரம், பசுபதிபாளையம், தாந்தோனி, வாங்கல், வெங்கமேடு, வெள்ளியணை காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் இந்த வாகனங்கள் ரோந்தில் ஈடுபடும். சாலை விபத்துகளில் சிக்கியோரை மீட்கவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குற்றங்களைத் தடுக்கும் வகையிலும் இந்த வாகனம் ரோந்தில்ஈடுபடுத்தப்படும்.

கரூரில் புதன்கிழமை நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட திருநங்கைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கரூரில் இருசக்கர வாகனங்களைத் திருடிய குற்றவாளியைக் கைது செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து திருட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT