முகப்பு
கரூர்

கரூரில் அரசு ஊழியா்கள் தா்னா போராட்டம்

 கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாலை நேர தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 கரூரில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மாலை நேர தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.கருணாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தாமோதரன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினாா். மாவட்ட துணைத்தலைவா்கள் தமிழ்வாணன், கண்ணதாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநிலச் செயலாளா் எம்.மகாவிஷ்ணு சிறப்புரையாற்றினாா்.

ஜனவரி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை ரொக்கமாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சடையாண்டி, அரசு ஊழியா் சங்க மாவட்ட பொருளாளா் பொன்ராம் ரத்தினவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.