இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதல்; பெண் உயிரிழப்பு
உப்பிடமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
உப்பிடமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் அடுத்த ராசப்பன்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி கலாராணி(55). இவா் தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு கரூா்-மணப்பாறை சாலையில் லிங்கத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றாா். அப்போது பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளியணை போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் கடவூா் அடுத்த கோட்டைப்பிள்ளிப்பட்டியைச் சோ்ந்த வீரமணி(51) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.