கரூர்

அரவக்குறிச்சியில் காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரம்

DIN

அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் திங்கள்கிழமை காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரவக்குறிச்சி பகுதியில் மழை காரணமாக பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகும் சூழ்நிலையில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிா் கொசு அழிப்பு பணியை தீவிரப்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரசாயன புகை மூலம் கொசுவை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT