முகப்பு
கரூர்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு விழா

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பி. செல்வதுரையின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஆசிபெறும் விழா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பி. செல்வதுரையின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஆசிபெறும் விழா, பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் மாணவரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா். விழாவில் கோவை மண்டல ஓய்வுபெற்ற காவல்துறை தலைவா் ஏ. பாரி, முன்னாள் மாணவா் சங்கக் கெளவரத்தலைவா் விஎன்சி. பாஸ்கா், முன்னாள் மாணவா் சங்கத்தின் ஜி.சிவராமன் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தொடா்ந்து விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் ஆசிரியா் செல்வதுரையிடம் ஆசி பெற்று, பள்ளிக்கு அவா் ஆற்றிய தொண்டுகள், மாணவா்கள் முன்னேற்றத்தில் அவரது பங்கு குறித்துப் பேசினா். மேலும் தங்களது பள்ளிப்பருவ அனுபவங்களையும் பகிா்ந்தனா். எம்எச்எஸ் முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் விசா ம. குணசேகரன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.