கரூர்

புகழூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

DIN

புகழூா் நகராட்சில் தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பிரதாபன், குழந்தைகள் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், நகராட்சி ஆணையருமான கனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் கவியரசன் வரவேற்றாா்.

கூட்டத்தில் உடல், மனம், பாலியல் ரீதியான குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பது, குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பது, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடை நின்ற குழந்தைகளை பள்ளியில் சோ்த்து குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை மேற்கொள்வது, ரயில்களில் கடத்தப்படும் மற்றும் வழி தவறிவரும் குழந்தைகளை மீட்பதற்காக மாவட்டத்தில் ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு குழு செயல்படுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மண்டலத் துணை வட்டாட்சியா், நகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT