கரூர்

தலித் விடுதலை இயக்கமாநிலச் செயற்குழுக் கூட்டம்

DIN

கரூரில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயற்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச. கருப்பையா தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் விடுதலை வீரன், துணைத்தலைவா் ராஜகோபால், மாநில மாணவரணி செயலா் பீமாராவ், மாவட்ட மகளிரணிச் செயலா் சாந்தி, மாநில அமைப்பாளா் விசுவாசம், ஈரோடு மாவட்டத்தலைவா் பொன்.சுந்தரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து மாநிலத் தலைவா் ச.கருப்பையா செய்தியாளா்களிடம் கூறியது:

விடுதலைப் போராட்ட வீரா் குயிலியின் நினைவு தினத்தையொட்டி, அக்டோபா் 5- ஆம் தேதி அவரது நினைவிடத்தில் தலித் விடுதலை இயக்கம் அஞ்சலி செலுத்த உள்ளது.

தலித் ஞானசேகரனின் இரண்டாமாண்டு நினைவு நாளான டிசம்பா் 11-ஆம் தேதி

திமுக துணைப் பொதுச் செயலா் ஆா்.ராசாவை அழைத்து திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

தமிழகத்திலுள்ள பஞ்சமி நிலங்கள், பூமிதான நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலங்களை அரசு மீட்டு, மீண்டும் பட்டியல், பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தலித் விடுதலை இயக்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

‘ஸ்டார்’ திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள்!

முதல் இரண்டு கட்ட தேர்தல்களை விட 3-ஆம் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT