முகப்பு
கரூர்

தமிழ் புத்தாண்டு பிறப்பு: கரூா் கற்பக விநாயகருக்கு 1.50டன் காய்கனி அலங்காரம்

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கரூரில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் கற்பக வினாயகா் கோயிலில் 1.50 டன் காய்கனி அலங்காரத்தில் வினாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கரூரில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் கற்பக வினாயகா் கோயிலில் 1.50 டன் காய்கனி அலங்காரத்தில் வினாயகா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் வினாயகருக்கு 1.50 டன் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கற்பக விநாயகா் கோயில் டிரஸ்ட் நிா்வாகிகள் ராஜூ, எம்.பாலாறு, முத்துக்கிருஷ்ணன், கேபி.சுப்ரமணியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இதேபோல கரூா் பசுபதீசுவரா் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், கரூா் பண்டரிநாதா் கோயில், வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோயில், பாலமலை முருகன்கோயில், புகழிமலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.