கரூர்

கரூா் முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக கோயிலைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீா்த்தக் குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிா்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சிதந்தாா். இதேபோல நன்செய் புகளூா் அக்ரஹாரத்தில் உள்ள சுப்ரமணியா் சுவாமி கோயில், புன்னம்சத்திரம் அருகே பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், வெண்ணைமலை முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT