கரூர்

பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தும் பயிற்சி

கரூா் மாநகராட்சி உறுப்பினா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கரூா்: கரூா் மாநகராட்சி உறுப்பினா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்தும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா முன்னிலை வகித்தாா். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், மாதிரி பள்ளி மேலாண்மை குழு கூட்டம், பள்ளி மேம்பாட்டு திட்டம் தயாரித்தல், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பள்ளி மேலாண்மை குழு சாா்ந்த கடமையும் பொறுப்பும் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் ஆசிரிய பயிற்றுநா் மலா்விழி மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளா் தீபா ஆகியோா் பயிற்சியளித்தனா்.

பயிற்சியில் அனைத்து மாநகராட்சி உறுப்பினா்கள், கரூா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சத்தியவதி, மாவட்ட கல்வி அலுவலா்கள் காமாட்சி (மேல்நிலை), மணிவண்ணன் (தொடக்கப்பள்ளி) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT