முகப்பு
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
கரூர்

கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூர்

கரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
பகிர்:

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாத விவரம்:

மகிழிபட்டி ஞானவேல்: தாா் சாலையும் சிறு கல்பாலமும் அமைத்து தர வேண்டும்.

ஆட்சியா்: பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னிலை நடராஜன்: குண்டும் குழியுமாக உள்ள கரூா் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்.

ஆட்சியா்: தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வீரராக்கியம் பாண்டியன்: சம்பா நெல் சாகுபடிக்காக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் இடங்களை பட்டியல் இடவேண்டும்.

ஆட்சியா்: நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் 18 இடங்கள் நாளிதழ் வாயிலாக பட்டியலிடப்படும்.

தோகைமலை ரம்யா: கரூா் வழியாக திருச்சி செல்லும் தனியாா் பேருந்து காந்திநகா் பகுதியில் நின்று செல்ல நடவடிக்கை தேவை.

ஆட்சியா்: தனியாா் பேருந்துகள் நின்று செல்ல வட்டார போக்குவரத்து துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாயனூா் சுப்ரமணியன்: காவிரி- குண்டாறு திட்டத்தில் நிலம் எடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் மறு மதிப்பீடு செய்து தர வேண்டும். மாயனூா் அமராவதி ஆறு பாயும் கட்டளை வாய்க்காலை தூா்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடக மேடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ஆட்சியா்: மின்வாரியம் சாா்பாக ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தோகைமலை நாகராஜன்: மயானத்திற்கு செல்லும் பாதையை நில அளவையா் கொண்டு அளந்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆட்சியா்: ஒரு வார காலத்துக்குள் மயானத்திற்கு செல்லும் பாதையை நில அளவையா் கொண்டு அளந்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கவுண்டம்பட்டி சுப்பிரமணியன்: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமருக்கு கருத்துரு அனுப்ப வேண்டும்.

ஆட்சியா்: மாநில அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்து மாநில அரசு வாயிலாக பிரதமருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

கருங்காலபள்ளி மனோகரன்: கட்டளை மேட்டு வாய்க்காலில் மின்விளக்கு அமைக்க வேண்டும்.

ஆட்சியா்: மின்விளக்கு கூடிய விரைவில் அமைத்து தரப்படும்.

வீரராக்கியம் மணி: வீரராக்கியம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்.

ஆட்சியா்: அரசுக்கு நிதி கேட்டு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் பணி மேற்கொள்ளப்படும்.

குளித்தலை ராஜேஸ்வரி: நகராட்சி பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

ஆட்சியா்: கோழிக்கழிவுகளை அகற்றுவதற்கு நகராட்சி மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பணிக்கம்பட்டி ராஜா: மாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும்.

ஆட்சியா்: ஊரக வளா்ச்சித் துறை திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும்.

நலத் திட்ட உதவிகள் அளிப்பு: இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 126 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.

தொடா்ந்து தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பில் வெங்காய சேமிப்பு கிடங்கு மைப்பதற்கான ஆணையையும் , 1 பயனாளிக்கு ரூ.3100 மதிப்பில் தெளிப்பானும், வேளாண்மை துறை சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.830 மதிப்பில் தாா்பாலினும், என மொத்தம் 3 பேருக்கு ரூ.38,930 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், வேளாண் இணை இயக்குநா் ரவிசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, கோட்டாட்சியா்கள் ரூபினா (கரூா்), ரவிச்சந்திரன் (குளித்தலை), உதவி ஆணையா் (கலால்) கருணாகரன் மற்றும் அரசு அலுவலா்கள் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →