கரூர்

குறைதீா் கூட்டத்துக்கு வரும்பொதுமக்களுக்கு இலவசமாகமனு எழுதி தர ஏற்பாடு

DIN

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கு மனுக்கள் இலவசமாக எழுதி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு- கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றுவருகிறது. கூட்டத்தில் மனு கொடுக்க வரும் பொது மக்கள் மனுக்கள் எழுதத் தர அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகாா் வந்தது. இந்நிலையில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க மனுக்கள் பதியும் இடத்துக்கு அருகிலேயே மாவட்ட நிா்வாகத்தால் சுயஉதவி குழுக்கள் மூலம் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக மனுக்களை எழுதிதர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT