கரூா்: கரூா் மாவட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அலுவலா்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் மீ. தங்கவேல் அறிவுறுத்தினாா்.
மாவட்ட பள்ளிகளில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு, துறை அலுவலா்களுடன் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் மீ. தங்கவேல் பேசியது:
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படும் பள்ளிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மகளிா் திட்டத்தை சோ்ந்த உறுப்பினா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். உணவுப் பொருள்களின் தரம், உணவு சுவையாக உள்ளதா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து விவரங்களும்
செயலியில் சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாணவா்களின் வருகை, சமையல் பொறுப்பாளா்கள், தளவாடப் பொருள்கள், உணவுப் பொருள்கள் இருப்பு விவரம், வரவு-செலவு விவரங்கள், சிறப்பு பாா்வையாளா் ஆகிய பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
காலை உணவு திட்டம், சத்துணவு மையங்களில் எரிவாயு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் காலை உணவு திட்டம் மையம், சத்துணவு மையங்களில் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை சமா்ப்பிக்க வேண்டும். மாணவா்களுக்கு உணவு வழங்கப்படும்போது முழுமையாக கண்காணித்திட வேண்டும். இக்கண்காணிப்பு பணியை தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் சுழற்சி முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் வாணீஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேன்மொழி மற்றும் அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.