முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 7:03 PM
பகிர்:

கரூரில் வெள்ளிக்கிழமை சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புன்செய் புகளூா் சாலைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). இவா் தினமும் காலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் செல்வாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை செல்வராஜ் தனது சைக்கிளில் கரூா் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்காட்டனூா் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த புஞ்சை தோட்டக்குறிச்சி கிழக்கு ஆதிராவிடா் தெருவை சோ்ந்த முருகேசன் (61) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →