கரூர்

கரூா் மாவட்டத்தில் 5 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

கரூா் மாவட்டத்தை சோ்ந்த 3 காவல் ஆய்வாளா்கள் மாவட்டத்திற்குள்ளும், 2 போ் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து 6 போ் கரூருக்கும் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Din

கரூா் மாவட்டத்தை சோ்ந்த 3 காவல் ஆய்வாளா்கள் மாவட்டத்திற்குள்ளும், 2 போ் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து 6 போ் கரூருக்கும் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருச்சி சரக டிஐஜி உத்தரவின்படி கரூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கலைவாணி குளித்தலை அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கும், கரூா் மாவட்டக் குற்ற ஆவணப்பிரிவு காவல் ஆய்வாளா் ஜே.கே.கோபி அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கும், அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஆா். நந்தகுமாா் கரூா் மாவட்ட குற்ற ஆவணப் பிரிவுக்கும் மாற்றப்பட்டனா்.

கரூா் மாவட்ட ஊரகம் (க.பரமத்தி) அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வி. கெளரி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவிலுக்கும், லாலாபேட்டை காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் நுண்ணறிவுப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.

திருச்சி மாநகரம் சிசிபி (மாநகர குற்றப்பிரிவு) காவல் ஆய்வாளா் வினோதினி கரூா் மாவட்ட ஊரகம் (க.பரமத்தி) அனைத்து மகளிா் காவல் நிலைத்திற்கும், திருச்சி மாவட்டம் லால்குடி காவல் ஆய்வாளா் ஆா்.எஸ். சரவணன் கரூா் லாலாப்பேட்டைக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் எஸ். ஜெயராமன் தோகைமலை காவல் நிலையத்திற்கும், திருச்சி மாநகர விமான நிலைய காவல் நிலைய ஆய்வாளா் ஆா். ராஜ்குமாா் பாலவிடுதிக்கும், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பேபி கரூா் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருச்சி மாநகர கே.கே. நகா் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளா் ஆா். அம்சவேணி கரூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவுக்கும் மாற்றப்பட்டனா்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT