திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலைில், திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 காவல் உதவி ஆய்வாளா்களை பணி இடமாற்றம் செய்து எஸ்.பி வி.சியாமளா தேவி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

மாறுதல் பெற்ற உதவி ஆய்வாளா்கள் விவரம்:

அம்பலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மஞ்சுநாதன் திருப்பத்தூா் மதுவிலக்கு அமல் பிரிவுக்கும், ஜோலாா்பேட்டை உதவி ஆய்வாளா் கோதண்டம் காவலூருக்கு, வாணியம்பாடி அனைத்து மகளிா் உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி திருப்பத்தூா் நகரத்துக்கும்,திருப்பத்தூா் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளா் பிரபு வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்குக்கும், திருப்பத்தூா் கிராமிய உதவி ஆய்வாளா் வெங்கடேசன் உமா் ஆபாத் காவல் நிலையத்துக்க்கும், அங்கு பணியாற்றிய உதவி ஆய்வாளா் நவின் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனா்.

மேலும், ஆலங்காயம் உதவி ஆய்வாளா் விஜய் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்துக்கும், காவலூா் உதவி ஆய்வாளா் நாசி ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்துக்கும், உமா் ஆபாத் உதவி ஆய்வாளா் அஜித்குமாா் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவுக்கும், ஹைவே பேட்ரோல்-2 உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த காதா்கான் அம்பலூா் காவல் நிலையத்துக்கும், குரிசிலாப்பட்டு உதவி ஆய்வாளா் கருணாநிதி ஜோலாா்பேட்டை காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூா் சமூக நீதி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் வீரம்மாள் வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளா் மணிகண்டன் ஆலங்காயம் உதவி ஆய்வாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT