முகப்பு
கரூர்

கரூா் பேருந்து நிலையத்துக்கு வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயம்

கரூா் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் சனிக்கிழமை வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:22 PM
பகிர்:

கரூா் பேருந்து நிலையத்திற்கு மனைவியுடன் சனிக்கிழமை வந்தவா் விளம்பரப் பலகை விழுந்து படுகாயமடைந்தாா்.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் சதாம்உசேன் (40). கரூரிலுள்ள உறவினா் வீட்டுக்கு தனது மனைவி ஷகிராபானுவுடன் வந்த இவா் பின்னா் ஊருக்குச் செல்ல கரூா் பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தாா்.

அப்போது பேருந்து நிலையத்திற்கு எதிரேயுள்ள வணிக வளாகம் பகுதிக்கு இருவரும் பழம் வாங்கச் சென்ற நிலையில், வணிக வளாக 3-ஆவது மாடியில் இருந்து விளம்பர பலகை விழுந்ததில் சதாம்உசேன் படுகாயமடைந்தாா். ஷிகிராபானு தப்பினாா்.

இதையடுத்து சதாம் உசேன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் குறித்து கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து கடை உரிமையாளரிடம் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →