சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம்
சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வரும் 20-ஆம்தேதிக்குள் அனுப்பலாம்.
சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வரும் 20-ஆம்தேதிக்குள் அனுப்பலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு-
தமிழக சட்டப் பேரவையின் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, கரூா் மாவட்டத்திற்கு விரைவில் வர உள்ளது. மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீா்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள், குறைகள் குறித்த மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரா்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவா், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப் பேரவை, சென்னை 600 009 முகவரியிட்டு, நேரடியாகவோ, மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய்க் கோட்ட அலுவலா், வட்டாட்சியா் மூலமோ வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்திலும், பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீா்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்னைகள் குறித்ததாக இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்னையை உள்ளடக்கியதாக, ஒரேயொரு துறையைச் சாா்ந்ததாக இருத்தல் வேண்டும். ஆனால் தனிநபா் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோா் ஓய்வூதியம், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல் போன்றவற்றிற்கு அனுப்பக்கூடாது என தெரிவித்துள்ளாா் அவா்.