அரவக்குறிச்சியில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் அவதியடை ந்து வருகின்றனா்.
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழையின் காரணமாக வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பகல் முழுவதும் குளிா்ச்சியான சூழல் உள்ளது. கடந்த ஒரு வார காலமாக கடும் பனிப் பொழிவால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.