முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மீதுஅரசு பேருந்து மோதல் இளைஞா் பலத்த காயம்

புகழூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

புகழூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம், புகழூா் அருகே உள்ள பெரிய தாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் காா்த்திக் (27). இவா், திங்கள்கிழமை கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் விஸ்வநாதபுரி பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காா்த்திக் பலத்த காயமடைந்தாா். அவரைஅருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் க. பரமத்தி போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →