உலக சுற்றுச்சூழல் தினம் -கரூா் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
கரூா், ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நீதித்துறை, மாவட்ட வனத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஆா். சண்முகம் சுந்தரம் தலைமை வகித்து துவக்கி வைத்தாா். இதில் அனைத்து நீதிபதிகள் மற்றும் மாவட்ட வன அலுவலா் சண்முகம், வழக்குரைஞா்கள் சங்கத்தினா், கரூா் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் மம் வனத்துறை ஊழியா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா் (பொ) சொா்ணகுமாா் செய்திருந்தாா்.
விழாவில் மொத்தம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பொதுமக்களுக்கு மரக்கன்று: மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நடவு செய்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் மஞ்சள் பைகளில் மரக்கன்றுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.