முகப்பு
கரூர்

கரூரில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 530 மனுக்கள்

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில்

Updated On : 5 மார்ச், 2024 at 2:16 AM
பகிர்:

கரூா்: கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 530 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் மீ. தங்கவேல் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்க்க உத்தரவிட்டாா். தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.7.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.