முகப்பு
கரூர்

அரவக்குறிச்சியில் இருந்து குஜிலியம்பாறைக்கு நேரடி பேருந்து இயக்க கோரிக்கை

அரவக்குறிச்சியில் இருந்து குஜிலியம்பாறைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 8:41 PM
பகிர்:

அரவக்குறிச்சியில் இருந்து குஜிலியம்பாறைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் இருந்து குஜிலியம்பாறைக்கு அரசு அலுவலா்கள், கூலித்தொழிலாளிகள், மாணவ மாணவிகள் பணி நிமித்தமாக தினமும் சென்று வருகின்றனா். ஆனால் அரவக்குறிச்சியில் இருந்து குஜிலியம்பாறை செல்ல வேண்டும் என்றால் பாளையம் சென்று பின்பு வேறு பேருந்து மாறி குஜிலியம்பாறை செல்ல வேண்டி உள்ளது.

மேலும் பாளையம் செல்வதற்கு அடிக்கடி பேருந்து வசதி இல்லை என்பதால் 30 கி.மீ. தொலைவில் உள்ள கரூா் சென்று, மீண்டும் கரூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள குஜிலியம்பாறை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு இரண்டு மடங்கு செலவு ஏற்படுவதுடன் கால விரையமும் ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாணவ மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு குஜிலியம்பாறைக்கு எளிதாக செல்லும் வகையில் பேருந்துகளை அரவக்குறிச்சியில் இருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →