முகப்பு
கரூர்

கரூரில் ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பொருள்கள் பறிமுதல் காா் ஓட்டுநா் கைது

கரூரில் புதன்கிழமை அதிகாலையில் போலீஸாரின் வாகனச் சோதனையின்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நாமக்கல்லைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:09 PM
பகிர்:

கரூரில் புதன்கிழமை அதிகாலையில் போலீஸாரின் வாகனச் சோதனையின்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நாமக்கல்லைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கரூா் நகர காவல்நிலைய தலைமைக்காவலா் ஆண்டனி இளங்கோ மற்றும் காவலா்கள் தீனதயாளன் உள்ளிட்டோா் புதன்கிழமை அதிகாலை கரூா்-ஈரோடு சாலையில் குட்டக்கடை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை மடக்கி சோதனை செய்தனா். அதில் காருக்குள் இருந்த மூட்டைக்குள் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்கூலிப், விமல் பான்மசாலா உள்ளிட்ட 147 கிலோ குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம். இதையடுத்து காா் ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தைச் சோ்ந்த தேவராஜ்(42) என்பவரை போலீஸாா் கைது செய்து காரை பறிமுதல் செய்தனா். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.