முகப்பு
கரூர்

கரூா் அருகே வீடு புகுந்து 4 பவுன் நகைகள் திருட்டு

கரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிச் சென்றது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 9:30 PM
பகிர்:

கரூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிச் சென்றது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

கரூா் அருகேயுள்ள கந்தம்பாளையம் அமிா்தம்நகா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (59), புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை வெல்டிங் காண்ட்ராக்டா். இவா் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 4 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.