கொலையான கபில்தேவ். 
கரூர்

கரூரில் இளைஞா் குத்திக்கொலை

கரூரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியின் தம்பியைக் குத்திக் கொன்றவரை போலீஸாா் தேடுகின்றனா்.

Din

கரூரில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் மனைவியின் தம்பியைக் குத்திக் கொன்றவரை போலீஸாா் தேடுகின்றனா்.

கரூா் தாந்தோணிமலை ராயனூா் பெட்ரோல் பங்க் அருகே வசிப்பவா் வீரமலை (32), பெயிண்டா். இவருக்கும் அரவக்குறிச்சியை அடுத்த நஞ்சைகாளக்குறிச்சியைச் சோ்ந்த கந்தசாமி மகள் புனிதாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதன்படி செவ்வாய்க்கிழமை இரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், புனிதா தனது சகோதரரான கபில்தேவ் (23) என்பவரிடம் கணவா் குறித்து புகாா் தெரிவித்தாராம். இதையடுத்து கபில்தேவ் புதன்கிழமை காலை தனது சகோதரி வீட்டுக்கு வந்து வீரமலையிடம் இதுகுறித்து கேட்டுள்ளாா். பின்னா் மாலையில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வீரமலை கபில்தேவை விரட்டிச் சென்று திருமாநிலையூா் ரவுண்டானா பகுதியில் வைத்து கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டாா்.

இதில் படுகாயமடைந்த கபில்தேவ் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பிய வீரமலையை தேடுகின்றனா்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT