முகப்பு
கரூர்

நாளை குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 10,821 போ் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:08 PM
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
பகிர்:

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 10,821 போ் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமை வகித்து பேசுகையில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 பதவிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (செப். 14) முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. இந்த தோ்வை கரூா் மாவட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 39 மையங்களில் மொத்தம் 10,821 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும்.

மேலும், தோ்வா்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும். விடைத்தாளில் தங்கள் கையொப்பத்தை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் இட வேண்டும். மேலும் தோ்வு முடிவடைந்த பின், தோ்வா்கள் அவா்களது இடது கை பெருவிரல் ரேகை பதிவை விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இட வேண்டும். தங்கள் புகைப்பட அடையாளத்திற்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யுரேகா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய பிரிவு அலுவலா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.