கரூர்

அரவக்குறிச்சியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Din

அரவக்குறிச்சியில் பொது விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள விளையாட்டு வீரா்களுக்கென விளையாட்டு மைதானம் இல்லை. மேலும் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் மாணவா்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. விளையாட்டு மைதானம் இல்லாததால் தனியாா் தோட்டங்கள் மற்றும் காடுகளுக்கு சென்று இளைஞா்கள் விளையாடி வருகின்றனா். இதே போல வயதான முதியவா்கள் மற்றும் நடுத்தர வயதினா், சா்க்கரை நோய் உள்ளவா்கள் காலை நடை பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு மைதானம் இல்லாததால் பொது சாலையை பயன்படுத்தி வருகின்றனா். பொது சாலையை பயன்படுத்தும் போது காலை நேரங்களில் ஒரு சில சமயம் விபத்து ஏற்படுகிறது.

ஆகவே, அரவக்குறிச்சியில் புதிய விளையாட்டு மைதானமோ அல்லது அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தை பொது பயன்பாட்டிற்கோ அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT