கரூா் அருகே மலைத்தேனீக்கள் கொட்டி விவசாயி மயக்கம்
கரூா் அருகே மலைத்தேனீக்கள் வியாழக்கிழமை கொட்டியதில் மயக்கமடைந்த விவசாயிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரூா் அருகே மலைத்தேனீக்கள் வியாழக்கிழமை கொட்டியதில் மயக்கமடைந்த விவசாயிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரைச் சோ்ந்தவா் ராஜா (40), விவசாயி. நடையனூா் அருகேயுள்ள தனது தோட்டத்தில் வியாழக்கிழமை இவா் பணி செய்து கொண்டிருந்தபோது பக்கத்து தோட்டக்காரா் அங்கு கிடந்த கரும்பு கழிவுகளில் தீ வைத்துள்ளாா். அப்போது அதிகளவில் வெளியேறிய புகை காரணமாக அங்குள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியேறி வந்து விவசாயி ராஜாவை கொட்டின.
இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.